Wednesday, October 3, 2018

ஏ.சியில் இருந்து கேஸ் எவ்வாறு கசிகிறது?

ஏ.சி யில் உள்ள வடிகட்டி தடுப்பில் தூசி அதிக அளவில் சேரும் போது, அதை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம். நாம் பயன்படுத்தும் ஏ.சி-யின் உள்ளே தூசி சேரும் போது ஏ.சி-யின் உள்ளே பிற உபகரணங்களும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

நாம் பயன்படுத்தும் ஏ.சி யின் குளிர் அளவு 18,16 போன்ற எண்ணிக்கையில் வைக்கும் போது, அதன் செயல்பாடு ஓய்வுன்றி தொடர்ச்சியாக இயங்கும். அப்போது குழாய் இணைப்பு உள்ள இடத்தில் இருந்து Freon என்ற வாயு கசியும்.



அந்த காற்றை நாம் சுவாசித்தால், உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது (மங்கலாக்கப்பட்ட பார்வை, மார்பு வலி, தலைச்சுற்றல், தலைவலி, மூச்சி திணறல், சுவாசம், குமட்டல் மற்றும் வாந்தி , உணர்வு இழப்பு). சில சமயம் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படும்.

ஏ.சியை நம் வீடுகளில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

* ஏ.சி தொழில்நுட்ப வல்லுனரின் அறிவுரையின் படி, வீட்டின் அளவு மற்றும் மின்சார வசதியை பொறுத்து, சரியான அளவு ஏ.சி-யை வைக்க வேண்டும்.

* Ventilation Unit எனப்படும், வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் ஏ.சி-யின் பாகம் பாதுகாப்பான, திறந்த வெளியில் இருக்க வேண்டும்.

* சீரான இடைவேளையில் ஏ.சியில் உள்ள வடிகட்டி தூசியை சுத்தம் செய்வது அவசியம்.



* நாம் தூங்கும் அறையில் குளிரின் அளவு சரியாக வரவில்லை என்றால் உடனடியாக ஏ.சி மெக்கானிக் மூலம் சரிபார்த்துக் கொள்வது நல்லது.