Thursday, December 20, 2018

பாஸ்போர்ட் விண்ணப்ப நிலை அறிய 24 மணிநேர இலவச டெலிபோன் வசதி

விண்ணப்பதாரர்கள் தங்களின் பாஸ்போர்ட் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள, 24 மணிநேரமும் செயல்படக்கூடிய இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.











இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் திருச்சி மற்றும் தஞ்சையில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, காரைக்கால் மற்றும் பெரம்பலூரில் தலா ஒரு தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த, நான்கு மையங்களிலும் தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெற்று பரிசீலனை செய்ய்யப்படுகின்றன. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு, விசாரணைகளுக்கு பின் தற்போதைய முகவரிக்கு பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு வருகிறது.





ஒரு சில விண்ணப்பதாரர்களிடம் இருந்து கூடுதல் ஆவணங்கள் பெற வேண்டிய நிலை ஏற்படும் போது, தாமதமாகிறது. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும் விண்ணப்பதாரர்கள், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், சமூக தணிக்கை பரிவில் அலுவலக வேலை நாட்களில் காலை, 9:30 மணி முதல் மதியம், 12:00 மணி வரை சமர்ப்பிக்கலாம். இதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, சமூக தணிக்கை பிரிவு செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மதியம், 1:00 மணி வரை திறந்திருக்கும். விண்ணப்பதாரர்கள் குறைதீர் பிரிவு வாரந்தோறும் புதன்கிழமைகளில் மதியம், 2:30 மணி முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படும். இரண்டுக்கும் மேற்பட்ட முறைகளில் அலுவலகத்துக்கு நேரில் வந்தும், தங்கள் பிரச்னை தீராத விண்ணப்பதாரரர்கள், குறைதீர் அலுவலரை புதன்கிழமைகளில் சந்திக்கலாம்.





இதற்கு rpo.trichy@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண், 1800 258 1800 ல் தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment