Friday, December 21, 2018

உரிய விண்ணப்பம் தராமல் விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவு

முன் அனுமதியின்றியும், உரிய விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.











இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில், முன் அனுமதியின்றியும், உரிய விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி விடுமுறை எடுக்கும் போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





அனுமதியின்றி விடுமுறை எடுக்கும் போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment