Friday, December 21, 2018

சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை: ஜன. 2-இல் விண்ணப்பம்

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் 2019-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு:





தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், எம்பிஏ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் 2019 -ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஜனவரி 2-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜனவரி 31 கடைசி நாளாகும்.





விருப்பமுள்ள மாணவர்கள் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் மூலமாகவோ அல்லது இணைய வழியாகவோ சேர்க்கை பெற முடியும். மேலும் விவரங்களை www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்கள் மூலமாக அறியலாம்.

No comments:

Post a Comment