டிஎன்பிஎஸ்சி வேளாண் அதிகாரி பணிக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு..!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெறவுள்ள உதவி வேளாண் அதிகாரி பணியிட தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் சார்பில் 580 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. குறிப்பாக, அன்றைய தினமே இரண்டு தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு 2 தாள்களாக நடைபெறும்.

இவற்றில், முதல் தாளில் வேளாண்மை, தோட்டக் கலை தொடர்பான 150 கேள்விகளும், இரண்டாம் தாளில் பொது அறிவு பகுதியில் 50 கேள்விகளும் இடம்பெறும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel