பிளஸ் 2 தேர்வில் 91.30% தேர்ச்சி: 1,281 பள்ளிகள் சதம் - சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் 6 முதல் 13-ஆம் தேதி வரை. நடைபெறும்

நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.30 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போலவே இம்முறையும் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வினை பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்களாகவும் மொத்தம் 8 லட்சத்து 69 ஆயிரத்து 423 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் ஒட்டுமொத்தமாக தற்போது 91.30 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2018) தேர்ச்சியுடன் (91.1 சதவீதம்) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 0.2 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.


தேர்வெழுதியவர்களில் 93.64 சதவீத மாணவிகளும், 88.57 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் கூடுதலாக 5.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். எனினும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் (94.10 சதவீதம்) இந்த ஆண்டு 0.5 சதவீத அளவுக்கு (93.64 சதவீதம்) குறைந்துள்ளது. தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 73 ஆயிரத்து 287 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவற்றில் மாணவர்கள் 44 ஆயிரத்து 472 பேர், மாணவிகள் 28 ஆயிரத்து 815 பேர் ஆவர்.
1,281 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி: இந்த ஆண்டு 7,083 மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். அதில் 1,281 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி அடைந்துள்ளன.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் 95.37 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு 85.47 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய 2,697 மாற்றுத் திறனாளிகளில் 2,404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோன்று தேர்வெழுதிய 45 சிறைவாசிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


வெறிச்சோடிய தனியார் பள்ளிகள்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோருக்கு மதிப்பெண்களுடன் செல்லிடப்பேசி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. தரவரிசை முறை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கான பரிசு வழங்குதல், சிறப்பிடம் பெற்ற மாணவர்களை விளம்பரப்படுத்துதல் என எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் அமைதியான சூழல் நிலவியது.
ஏப். 22 முதல் மறுகூட்டலுக்கு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வரும் திங்கள்கிழமை (ஏப்.22) முதல் புதன்கிழமை (ஏப்.24) வரை விண்ணப்பிக்கலாம்.


திருப்பூர் மாவட்டம் முதலிடம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.37 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளையில் 85.47 சதவீதத் தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.

மாவட்டம் வாரியாகத் தேர்ச்சி சதவீதம்:
திருப்பூர் 95.37
ஈரோடு 95.23
பெரம்பலூர் 95.15
கோவை 95.01
நாமக்கல் 94.97
கன்னியாகுமாரி 94.81
விருதுநகர் 94.44
திருநெல்வேலி 94.41
தூத்துக்குடி 94.23
கரூர் 94.07
சிவகங்கை 93.81
மதுரை 93.64


திருச்சி 93.56
சென்னை 92.96
தேனி 92.54
ராமநாதபுரம் 92.30
புதுச்சேரி 91.22
தஞ்சாவூர் 91.05
நீலகிரி 90.87
திண்டுக்கல் 90.79
சேலம் 90.64
புதுக்கோட்டை 90.01
காஞ்சிபுரம் 89.90
அரியலூர் 89.68
தருமபுரி 89.62
திருவள்ளூர் 89.49
கடலூர் 88.45
திருவண்ணாமலை 88.03
நாகப்பட்டினம் 87.45


கிருஷ்ணகிரி 86.79
விழுப்புரம் 85.85
வேலூர் 85.47

முக்கிய தேதிகள்
ஏப்ரல் 20
பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
ஏப்ரல் 24
மதிப்பெண் சான்றிதழ் இணைய தளத்தில் வெளியீடு பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி: http://www.dge.tn.gov.in/
ஏப்ரல் 26
பதிவிறக்கம் செய்வதற்கான கடைசித் தேதி
ஏப்ரல் 22
விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பம் தொடங்கும் நாள்
ஏப்ரல் 24


விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
ஏப்ரல் 22
மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பம் தொடங்கும் நாள்
ஏப்ரல் 24
மறுமதிப்பீடு செய்வதற்கான கடைசி நாள் விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம்: ஒரு பாடத்துக்கு ரூ.275 மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம்: ரூ. 205 (உயிரியல் பாடம் தவிர) உயிரியல் பாடத்துக்கு மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம்: ரூ.305 சிறப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறும் நாள்: ஜூன் 6 முதல் 13-ஆம் தேதி வரை.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel