கடந்த ஆண்டு விடுபட்ட 8 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம்

கடந்த ஆண்டு விடுபட்ட 8 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், சுற்று வட்டாரங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு விடுபட்ட 8 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel