வெளிமாநிலங்களில் ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், துணை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அசிம் பிரேம்ஜி பவுண்டேசன் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அசிம் பிரேம்ஜி பவுண்டேசன் தலைவர் (களநியமனம்) சௌரப்சௌகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரகண்ட், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் மொத்தம் 8 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது அசிம் பிரேம்ஜி பவுண்டேசன். இந்நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புபவர்களுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர் பணியிடத்துக்கும், முதுகலைப் பட்டப்படிப்புடன் வட்டார மொழியில் புலமை பெற்றவர்கள் துணை ஆசிரியர் பணியிடத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.

கடந்தாண்டு முதுகலை பட்டம் பெற்றவர்களும், 2019 ஆண்டு பட்டம் பெறவுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப். 15 ஆம் தேதிக்குள், ஆசிரியர் பணியிடங்களுக்கு w‌w‌w.​a‌z‌i‌m‌p‌r‌e‌m‌j‌i‌f‌o‌u‌n‌d​a‌t‌i‌o‌n.‌o‌r‌g/​c​a‌r‌e‌e‌r-‌l‌i‌s‌t என்ற இணைய தளத்திலும், துணை ஆசிரியர் பணியிடங்களுக்கு w‌w‌w.​a‌z‌i‌m‌p‌r‌e‌m‌j‌i‌f‌o‌u‌n‌d​a‌t‌i‌o‌n.‌o‌r‌g/​c​a‌m‌p‌u‌s இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel