Search This Blog

Thursday, April 4, 2019

TNPSC - குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு : தேர்வு நடந்த ஒரு மாதத்தில் டிஎன்பிஎஸ்சி அதிரடி

0 comments

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் ஆகிய பதவிகளில் 181 காலிப்பணியிடங்களுக்கு மார்ச் 3-ம் தேதி தேர்வு நடந்தது; ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.



1,68,549 விண்ணப்பத்தாரர்களில் முதன்மை தெரிவுக்கு 9,850 பேர் தேர்வாகியுள்ளார். ஜூலை 12,13 மற்றும் 14-ம் தேதிகளில் முதன்மை தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.