Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 11, 2019

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வித்யதன் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!



வித்யதன் கல்வி உதவித்தொகை பெற ஜூலை 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையிலிருந்து வித்யாதன் ஸ்காலர்ஷிப் திட்டம் பொருளாதார ரீதியாக சவால் நிறைந்த குடும்பங்களில் இருந்து வரும் தகுதியான மாணவர்களின் கல்லூரி கல்விக்கு உதவி வருகிறது. 10ஆம் வகுப்பு / எஸ்எஸ்எல்சி முடித்த மாணவர்கள் கடுமையான தேர்வுக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தற்போது 3500 மாணவ, மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.


தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அறக்கட்டளையிலிருந்து இரண்டு வருடம் உதவி தொகை பெறுவார்கள். அவர்கள் தொடர்ந்து நல்ல முறையில் இருந்தால், அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எந்த பட்டப்படிப்பை படிக்கிறார்களோ அதற்கும் உதவித்தொகை வழங்கப்படும். இந்த கல்வி உதவித்தொகை நேரடியாக அறக்கட்டளையுடன் பதிவுசெய்தவர்கள் அல்லது வெளிப்புற விளம்பரதாரர்களிடமிருந்து பெற்று தரப்படும். பட்டப்படிப்பு படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் தொகை வருடத்திற்கு 10,000 ரூபாய் முதல் 60,000 வரை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அறக்கட்டளை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்