Search This Blog

Monday, June 10, 2019

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் வேலை

0 comments
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள கேங்க்மன் ட்ரேனே (Gangman Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

கேங்க்மன் ட்ரேனே (Gangman Trainee) பிரிவில் 5000 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஐந்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.



ஊதியம்:

மாதம் ரூ. 15,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 500 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-06-2019