Search This Blog

Tuesday, June 18, 2019

சென்னைப் பல்கலை.யில் தற்காலிக பேராசிரியர் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

0 comments
தற்காலிக பேராசிரியர் பணியிடத் தேர்வுக்கான விண்ணப்பங்களை சென்னைப் பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் 75 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கும், 17 ஆராய்ச்சியுடன் கூடிய ஆசிரியர் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான விவரங்களையும், விண்ணப்பப் படிவத்தையும் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 28 ஆகும்.