Thursday, July 18, 2019

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை




மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) காலியாக உள்ள இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் :

இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant) பிரிவில் 129 உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma in Mechanical Engineering,Diploma in Chemical Engineering,Diploma in Instrumentation and Control Engineering,Diploma in Electrical Engineering,B.Sc Chemistry,B.Sc Mathematics,B.Sc Physics,B.Sc Industrial Chemistry ஏதாவதொரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.



ஊதியம்:

ரூ. 11,900 முதல் ரூ. 32,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, திறன் மற்றும் திறமை மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/68.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-07-2019