JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, September 2, 2019

சவூதி அரேபியாவில் செவிலியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சவூதி அரேபியாவில் செவிலியராகப் பணியாற்ற விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான நேர்முகத் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பி.எஸ்சி. தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குள்பட்ட பெண்களை சவூதி அரேபியாவில் செவிலியர்களாக நியமிக்க அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் முன்வந்துள்ளது.

அதற்கான வேலைவாய்ப்பு பதிவு முகாம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 6 மற்றும் 7-ஆம் தேதிதளில் நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ள 2 வருட பணி அனுபவம் அவசியம். தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு மாத ஊதியம் ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.


விருப்பமுள்ளவர்கள், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-22505886/22502267/8220634389 என்ற தொலைபேசி எண்களையோ அல்லது www.omcmanpower.com என்ற வலைதளத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment