தமிழகம் முழுவதும் உள்ள 412 இலவச நீட் பயிற்சி மையங்களில் நாளை முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நாளை முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்களுக்கும், பின்னர் வார இறுதி நாட்களில் மட்டும் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். காலை 9.30 மணி முதல் 12.40 மணி வரையிலும், பிற்பகல் 1.10 மணி முதல் 4.20 மணி வரையிலும் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, முந்தைய நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். குஜராத்தைச் சேர்ந்த ஈடூஸ் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், அரசு ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகின்றன ' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe Us
Monday, September 23, 2019
நாளை முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment