Friday, October 4, 2019

திருக்குறள் - குறள் எண் 04



பால்: அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

குறள்: 04


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல


வேண்டுதல் - விரும்புதல்
வேண்டாமை – விரும்பாத தந்மை (வெறுப்பு)
இலானடி – இல்லாதவன் அடி
சேர்ந்தார்க்கு – நெருங்கியவற்கு (சேர்ந்தவர்க்கு)
யாண்டும் – எப்பொழுதும்
இடும்பை இல – துன்பம் இல்லை

விருப்பு வெறுப்பு இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளை தம் மனத்தால் நினைப்பவருக்கு எக்காலத்தும் எந்த சூழ்நிலையிலும் துன்பங்கள் வருவதில்லை.

விருப்பு உடையவன் வேண்டியவற்குச் சலுகை காட்டுவான். வெறுப்பு உடையவன் வேண்டாதவர்களைப் பழிவாங்குவான். அவன் மனிதன். ஆனால் விருப்பு வெறுப்பு இல்லாதவன் இறைவன். எனவே அவனிடம் நம் குறைகளை முறையிட்டால் விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் நமக்கு நன்மைகளைச் செய்வான் என்கிறார் திருவள்ளுவர். அதனால்தான்