சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெருவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான தேசிய அளவிலான தகுதித் (நெட்) தேர்வு, வரு கிற டிசம்பர் 2 முதல் 6 -ஆம் தேதி வரையிலான ஏதாவது ஒரு தேதியில் தேய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வை எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி.மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு இலவச பயிற்சி வகுப்பை சென்னைப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண் டும் நடத்தி வருகிறது.
அதுபோல, இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்பு அக் டோபர் 19 முதல் நவம்பர் 17 வரை நடைபெறும் என முன் னர் அறிவிக்கப்பட்டது. இப்போது, பயிற்சி வகுப்பு நவம்பர் 2 - ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2 முதல் 24 வரை நடைபெற உள்ள இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அக்டோபர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Thursday, October 24, 2019
Home
கல்விச்செய்திகள்
நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு. அக்டோபர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு. அக்டோபர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்