THAMIZHKADAL Android Mobile Application

Thursday, November 14, 2019

குழந்தைகள் நலன் காக்க இன்று உறுதியேற்போம்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் உலகில் ஏறத்தாழ 85 நாடுகளில் குழந்தைகள் தினம் என்று வெவ்வேறு தினங்களில் பிரத்தியேகமாகக் கொண்டாடப் படுகின்றது. இந்தியா: நவம்பர் 14, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளான இன்று நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.



உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது. தீபாவளி, புத்தாண்டு போல், குழந்தைகள் தினத்தையும் ஒரு பண்டிகை போல் மகிழ்வுடன் இருக்க வேண்டும். இன்றைய தினத்தில் நம்முடைய குழந்தைகளினால் நமக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்து, நமது அன்பால் நன்றி செலுத்த வேண்டும் .நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.




ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும். குழந்தைகளின் ஆரம்பக் கல்வியினை உறுதி செய்வது நமது கடமையாகும்.

இதனை வழங்க அனைத்து பெற்றோர்களும் உறுதி மேற்கொள்ள வேண்டும்.பிற நாடுகளில் குழந்தைகள் தினம்பல்கேரியா: ஜூன் 1ம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக அன்று வாகனங்களில் விளக்குகளை பகலிலும் எரியவிட்டு செல்வது வழக்கம்.கனடா: நவம்பர் 20, குழந்தைகள் நலத்தைப் பற்றிய சட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் அவர்கள் முன்னேற்றத்துக்கு உகந்த சட்ட வரைவுகளை அறிமுகம் செய்யும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.



ஜப்பான்: ஜப்பானில் மட்டும் இரண்டு குழந்தைகள் தினங்கள் கொண்டாடப்படுகின்றன. மார்ச் 3ம் தேதியில் பெண் குழந்தைகளுக்காகவும், மே 5ம் தேதியில் ஆண் குழந்தைகளுக்காக கொண்டாடப்படுகிறது.மெக்ஸிகோ: மெக்ஸிகோவில் ஏப்ரல் 30-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மிக அடர்த்தியான வண்ண உடைகளை அணிவித்து வசந்த காலத்தை வரவேற்கின்றனர். பராகுவே: ஆகஸ்ட் 16-ம் தேதி, 'அகோஸ்டா நு' என்னும் போரின்போது 20,000 வீரர்களை எதிர்த்து 6 முதல் 15 வயது சிறுவர்கள் 3,500 பேர் போரிட்டதை நினைவுகூரும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.பெரு: இந்நாட்டில் குழந்தைகள் தினம் ஷாப்பிங் தினமாக கொண்டாடப்படுகிறது

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News