Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 28, 2019

தேசிய திறனாய்வு தேர்வு (NMMS) ஜனவரியில் நடத்த கோரிக்கை!


அன்பான வேண்டுகோள்

தேசிய திறனாய்வு தேர்வு (NMMS) நடப்பு ஆண்டில் NMMS தேர்வு தேதி டிசம்பர் 1 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எட்டாம் வகுப்பில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இரண்டாம் பருவ அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடபுத்தங்கள் பள்ளி திறந்து ஒரு வார காலம் தாமதமாகதான் தரப்பட்டது. மேலும் இந்த பருவத்திற்குரிய படங்கள் அதிகமாக இருக்கிறது. இரண்டாம் பருவம் டிசம்பரில் பாடம் நடத்தி முடிக்க முடியும்,பருவ தேர்வும் டிசம்பர் 23 ல்தான் முடிகிறது. மேலும் இப்பருவத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளும் SALASITHI பார்வை மற்றும் NISTHA, STIR பயிற்சி மற்றும், மழை , பண்டிகைகள்



காரணமாக பாடம் நடத்த போதுமான அவகாசம் இல்லாத காரணத்தினால் NMMS தேர்வு தேதியை இரண்டு வாரம் அல்லது ஜனவரியில் நடத்தினால் சிறப்பாக இருக்கும். அதற்குள் டிசம்பரில் 2 ம் பருவம் மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடிக்கப்படும். எனவே NMMS தேர்வை தள்ளி வைத்தால் ஏழை மாணவர்கள் பயன்பெற ஏதுவாக அமையும். எனவே தயவு செய்து மாநில தேர்வு துறை கனிவுடன் பரிசீலனை செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.மேலும் இயக்குனர் அவர்களின் கவனத்திற்கு இதை கனிவுடன் பரிசீலனை செய்ய அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.




அன்புடன்
ஆ. அருள் மொழி
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நல கூட்டமைப்பை
தலைவர் தர்மபுரி மாவட்டம்