Friday, July 24, 2020

இன்று முதல் பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 2 மறு கூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் இன்று முதல் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் 16ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் சந்தேகம் இருப்பவர்கள் மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள் நகல் பெறவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.

பிளஸ்2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு வரும் 24 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...!!!

பள்ளிகள் மூலம் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களின் மூலம் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இன்று அந்த பணிகள் தொடங்க உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குதல் மறுமதிப்பீடு மறுகூட்டல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு

விடைத்தாள் நகல்வேண்டி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் விடைத்தாள்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும். அது குறித்து அறிவிப்பு வெளியானதும் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு தான் மறு மதிப்பீட்டு செய்வதற்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment