Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 18, 2020

இத செஞ்சிங்கன்னா ஆயுளுக்கும் உங்களுக்கு ஆஸ்துமா வராது..


நாள்பட்ட ஆஸ்துமா குணப்படுத்த முடியாத ஒரு பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும். இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.இயற்கை வைத்தியத்தில் இது சாத்தியம். பக்க விளைவுகள் இல்லை நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது. கிருமிகளை அழிக்கும். எப்படியென பார்க்கலாம்.

தேவையானவை :

உலர் திராட்சை - 10 கிராம் , இஞ்சி தூள் - 10 கிராம் , தேன் - 2 டேபிள் ஸ்பூன் , பெரிய நெல்லிக்காய் - 2

தயாரிக்கும் முறை :

ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். நெல்லிக்காயின் வெளிப்புறம் வேகும் வரை வைக்கவும்பின்னர் அடுப்பை அணைத்து நீர் ஆறிய பின் நெல்லிக்காயிலிருக்கும் விதைகளை நீக்கி அவற்றை மிக்ஸியில், அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த நெல்லிக்காயில் இப்போது உலர் திராட்சைகளையும் சேர்த்து அரையுங்கள். நன்றாக பேஸ்ட் போல் ஆனதும், அதனுடன் இஞ்சி தூளையும் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள். பின்னர் இதனை ஒரு சுத்தமன கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்து ரெடி.

எப்படி சாப்பிட வேண்டும்?
தினமும் மூன்று வேளைக்கு 5 கிராம் அளவு இந்த மருந்தை சாப்பிடுங்கள். இது சாப்பிடும்போது அதிக தாகம் எடுக்கும். ஆகவே வெதுவெதுப்பான நீரை அருந்துங்கள்.

பலன் :
இது ஆஸ்துமா இருமல் மட்டுமல்லாது நுரையீரல் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றும்.

No comments:

Post a Comment