Search This Blog

Friday, July 17, 2020

'தயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை மட்டும் மறந்தும் கூட சாப்பிட்டு விடாதீர்கள்

0 comments

பலாப்பழத்தில் பல சத்துக்கள் இருக்கிறது என்பது நம் அனைவருக்கே தெரிந்த ஒன்று தான். அதேபோல் தயிரிலும் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்பதும் நமக்கு தெரியும்.

இவை இரண்டையும் தனித்தனியாக சாப்பிடும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தயிரையும், பலாப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் பல பிரச்சனைகளை ஏற்ப்படுத்தும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்படுகிறது.

மேலும் ஆயுர்வேத ஆய்வுகளின்படி, பலாப்பழம் மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து அறிவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தயிருடன் பலாப்பழம் சேர்ப்பது அதன் தரத்தை அதிகரிப்பதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் இவை இரண்டின் அளவும் சரியாக இருக்க வேண்டும். அப்போது இரண்டு மடங்கு அதிக பலனை தரும் .

ஆனால் இவை இரண்டின் அளவில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் நிச்சயம் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment