Search This Blog
Tuesday, August 18, 2020
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியோர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களின் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட, சி.இ.ஓ., முருகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2, பொதுத்தேர்வு, மறுதேர்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி, விண்ணப்பித்த தேர்வர்கள், இன்று (ஆக.,18) பிற்பகல் முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று, நோட்டிபிகேஷன் பக்கத்தில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த நாளை பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில், 'Retotalling/Revaluation' என்ற தலைப்பை, 'கிளிக்' செய்து, வெற்றி விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து, வரும், 21 முதல், 25 மாலை, 5:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட, டி.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை, டி.இ.ஓ., அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)