ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில், தமிழ்ப்பொழில் வலைதளத்தில் தமிழ் இலக்கிய இலக்கணத் திறனறி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. திறனறி தேர்வுகள் -1 முதல் 5 சிறப்பாக நடந்து முடிந்த நிலையில்,தமிழ் இலக்கிய இலக்கணத் திறனறி தேர்வு-6 (சிலப்பதிகாரம்,நடைமுறை இலக்கணம்)இன்று 16-08-2020 முதல் 21-08-2020 வரை
(6 நாட்களுக்கு மட்டுமே இணைப்பு செயல்படும்) இணைய வழியிலான இயங்கலைத்தேர்வாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இத்தேர்வில் ஆசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,இணைப்பேராசிரியர்கள்,தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.தேர்விற்கான கட்டணம் ஏதுமில்லை.தேர்வில் பங்கேற்று 60 சதவீத மதிப்பெண் பெறுபவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வழியாக மின்சான்றிதழ் அனுப்பப்படும்.தேர்வு தொடங்கி முதலில் நிறைவு செய்யும்100 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அன்றைய நாளில் மின்சான்றிதழ் கிடைக்கும்.மற்றவர்க்கு வரிசை மூப்பின் அடிப்படையில் அனுப்பப்படும்.தேர்வு நாள் முடிந்தும் சான்றிதழ் கிடைக்காதவர்கள் கீழ்க்குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.அனைவரும் இயங்கலைத் தேர்வில் பங்கேற்று வெற்றிபெற வாழ்த்துகள்.பங்கேற்பாளர்கள் தங்கள் விவரங்களை தமிழில் மட்டுமே பதிவிடவும்.
தேர்வுக்கான இணைப்பு: http://thamizhpozhilvasu.blogspot.com/2020/08/6_16.html
தொடர்புக்கு:
வெ.க.வாசு,(த.த.க.உறுப்பினர்)
தமிழாசிரியர், அ.உ.நி.ப,
தணிகைப்போளூர்,
இரா.பே.மாவட்டம்.
அலைபேசி:9659838387
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)