Search This Blog

Wednesday, August 26, 2020

ஆதிதிராவிட நலப்பள்ளியில் ஆசிரியர் நியமிக்கக்கோரி மனு

0 comments
ஆதிதிராவிட நலப்பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

செஞ்சி தாலுகா அகலுாரைச் சேர்ந்த காங்., விவசாய பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் ஜோலாதாஸ் தலைமையில் கொடுத்துள்ள மனு:

எங்கள் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இங்கு கடந்த ஓராண்டாக தற்காலிக ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.தற்போது தற்காலிக ஆசிரியர்களையும் பணிக்கு அனுப்பவில்லை. 

மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், இப்பள்ளியில் மட்டும் சேர்க்கை நடைபெறவில்லை. மாணவர்களுக்கு சீருடையும் கொடுக்கவில்லை.

எனவே, இப்பள்ளிக்கு ஆசிரியர்களை நியமித்து, தரத்தை உயர்த்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment