JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பொது முடக்க காலத்தையொட்டி மாணவர்களின் வீட்டிற்கே சென்று வரக்கால்பட்டு அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். ஊரடங்கு காலம் என்பதால் பொதுப் போக்குவரத்தின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயா, ஆசிரியர்களை மாணவர்களின் இல்லத்திற்கே அனுப்பி மாணவர்களை சேர்த்துள்ளார்.
6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் இருந்து இப்பள்ளிக்கு சேர்ந்து வருகின்றனர்.குணமங்கலம், வெள்ளப்பாக்கம், மருதாடு, பில்லாலி, தோட்டப்பட்டு போன்ற ஊர்களை சேர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து பள்ளியில் சேர்த்தனர்.
அவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாட புத்தகங்கள், புத்தகப்பை, நோட்டுகள் போன்றவற்றை பள்ளி ஆசிரியர்கள் பாஸ்கர் ரிச்சர்ட், ஜோதிலட்சுமி, ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர். கடந்த 3 நாட்களில் 75 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment