Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 11, 2020

வீட்டில் பல்லி தொல்லையா?விரட்ட இதோ எளிய வழிகள்



வீடுகளில் பல்லிகள் தொந்தரவுகள் இருந்தால் அதனை விரட்ட இதோ எளிய சில வழிகள் பல்லி வரும் இடங்கள், தங்கும் இடங்களில் முட்டை ஓட்டை வைத்தால் பல்லி வரவே வராது. 

மயில் தோகையை பல்லி வரும் இடங்களில் வைத்தால் பல்லிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். 

பீரோக்களில் வாசனைக்காக வைக்கப்படும் இரசக் கற்பூரம் பல்லியின் தொந்தரவை போக்கவும் உதவும். 

மிளகைத் தண்ணீரில் நன்கு ஊற வைத்து மிக்ஸியின் மைய அரைத்து அதன் நீரை மட்டும் வடிகட்டி அதை வீட்டுச் சுவர்களில் ஸ்பிரே செய்தால் பல்லி வீட்டை விட்டு ஓடிவிடும். 

பூண்டுப் பற்களை அரைத்து அதன் நீரை பல்லி மீது தெளித்தால் பல்லி தொல்லை ஒழியும் வெங்காயத்தை வெட்டி பல்லி வரும் மூலைகளில் வைக்கலாம், அல்லது வெங்காயத்தை அரைத்து அதன் சாறை மூலைகள், ஜன்னல்களில் தெளித்து விட்டால் அதன் நெடி தாங்க முடியாமல் உள்ளே வராது. பிரியாணியில் சேர்க்கப்படும் பிரிஞ்சு இலைகளை எரித்து அதன் புகையை வீட்டில் பரப்பினால் பல்லி தொல்லை ஒழியும்

No comments:

Post a Comment