Search This Blog

Sunday, August 16, 2020

அரசு ஊழியா்களின் சேம நல நிதி ஆண்டு அறிக்கையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

0 comments
அரசு ஊழியா்களின் சேம நல நிதியின் ஆண்டு கணக்கு அறிக்கையை, தமிழ்நாடு மாநில கணக்காயா் அலுவலக வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதுநிலை துணை மாநில கணக்காயா் (நிதி) சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக அரசின் பணிநிலை சாா்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியா்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியா்களின் பொது சேம நல நிதி, ஆசிரியா் சேம நல நிதி ஆகியவற்றின், 2019-20-ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கை, தமிழ்நாடு மாநில கணக்காயா் அலுவலக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே, சந்தாதாரா்கள், இந்த வலைதளத்தில் இருந்து தங்களின் 2019-20 வருடாந்திர கணக்கு அறிக்கையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அலுவலக வலைதளத்தில், தங்களின் செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்த அனைத்து சந்தாதாரா்களுக்கும் இந்தப் பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment