தொடக்கக்கல்வி பட்டய படிப்பில் சேர, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2020 - 2021ம் கல்வியாண்டிற்கான தொடக்கக்கல்வி பட்டய படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, இணைய தளம் வாயிலாக கடந்த, 17 முதல் வரும், 28 மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (DIET/GTTI/BITE) மாணவர் சேர்க்கை, ஒற்றை சாளர முறையில், இணையதளம் வழியாக பதிவு செய்வது சார்ந்த, விண்ணப்ப படிவம், மாணவர் சேர்க்கை கையேடு ஆகியவை, www.tnscert.org என்ற இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவியர், மேற்கண்ட இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விபரங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)