"நாட்டில் மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும்" : மத்திய அரசு உறுதி!

புதிய கல்விக் கொள்கையின்படி நாட்டில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக அரசு அறிவித்தது குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

அதில் , புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் , மூன்றாவது மொழியாக எதை கற்க வேண்டும் என்பது மாநிலங்கள் மற்றும் மாணவர்களின் முடிவு என்றும் கூறப்பட்டுள்ளது .

மூன்றாவதாக எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் மத்திய கல்வி அமைச்சம் கூறியுள்ளது .
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel