ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் - 2 க்கான எழுத்து தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்திடும் மந்தனப் பணிக்கு தங்களது பள்ளியில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களில் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்து தெரிவு செய்த ஆசிரியர்களின் பெயர்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் ceocuddalore@gmail.com முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் ஒப்பமிட்ட நகலினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் 09.09.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை தெரிவு செய்திடல் வேண்டும்.
1. சார்ந்த ஆசிரியர் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் .
2. கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்துபவர்களாக இருத்தல் வேண்டும்.
3. சார்ந்த ஆசிரியர்களால் பாடம் நடத்தப்பட்ட வகுப்புகளில் மாணவர்கள் குறைந்த பட்சம் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
4. மந்தன பணி என்பதால் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
5. சார்ந்த ஆசிரியர்கள் மீது எவ்வித குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை இருத்தல் கூடாது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» TET PAPER II - தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்யும் மந்தனப் பணிக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் அனுப்பு உத்தரவு.










No comments:
Post a Comment