Subscribe Us

Friday, October 16, 2020

புதுச்சேரியில் பள்ளிக்கு சென்ற 2 மாணவிகளுக்கு கொரோனா

புதுச்சேரியில் பள்ளிக்கு சென்ற 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 8 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 10,12 ஆம் வகுப்புகளுக்கு 3 நாட்களும், 9, 11 ஆம் வகுப்புக்கு 3 நாட்களும் என வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலாப்பட்டு அரசு பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி மற்றும் வாதானூர் அரசு பள்ளியில் 10-ம்வகுப்பு படிக்கும் மாணவி இருவருக்கும் கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது. மேலும் அவர்கள் படித்த வகுப்பறைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாணவிகள் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அவர்களுடன் தொடர்பிலிருந்த மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed