Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Wednesday, October 14, 2020

பொறியியல் பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர் பயிற்சி: பொதுப்பணித்துறை அறிவிப்பு

சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றவர்கள் தொழில்பழகுநர் வாரியத்தில் ஓராண்டு பயிற்சிக்கு நவம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் தொழில்பழகுநர் வாரியம் (தென்மண்டலம்) சார்பில் கடந்த 2017, 2018,2019 மற்றும் 2020 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து சிவில், எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயம் முடித்த பொறியாளர்களிடம் இருந்து ஓராண்டு பயிற்சிக்கான ஆன்லைன் வின்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேலும் விவரங்களுக்கு www.boat-srp.com என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை நவம்பர் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment