Search This Blog

Friday, November 20, 2020

8, 10, 12ம் வகுப்பு முடித்த 10 ஆயிரம் பேருக்கு சென்னையில் மாநகராட்சியில் வேலை!

0 comments
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னையில் மாநகராட்சியில் வேலைவாய்ப்பு காத்திருக்குது.

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக 10 ஆயிரம் பணியிடங்கள் காலியகாக இருப்பதாக மாநகராட்சி அறிவித்திருக்கிறது.

தூய்மைபணியாளர்கள், உதவியாளர்கள், இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கும், பேட்டரி ரிக்‌ஷா ஆபரேட்டர் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

இதற்காக 18.11.2020 முதல் நடந்து வரும் நேர்முகத்தேர்வு வரும் 28.11.2020 அன்றுடன் முடிவடைகிறது.

சென்னையில் தி.நகர் பார்த்தசாரதிபுரம் சோமசுந்தரபுரம் விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரைக்கும் நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கு 8,10,12 வகுப்பு படித்தவர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு, வங்கி கணக்கு, பள்ளி சான்றிதழ் மற்றும் நான்கு புகைப்படங்களுடன் நேர்முகத்தேர்வுக்கு செல்லலலாம்.

இதுபற்றிய மேலும் விபரம் தேவை எனில், 7338888166, 7338882241 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment