Search This Blog

Thursday, November 19, 2020

சட்டப் பேரவைத் தேர்தல் பணி:ஆசிரியா் பட்டியலைத் தயாரிக்க உத்தரவு

0 comments
சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஆசிரியா்கள் பட்டியலைத் தயாரித்து அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகளில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் தான் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவா். அதன்படி இந்தமுறை தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை விரைவாக முடிக்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தலைமையாசிரியா்கள் தங்கள் பள்ளியில் தேர்தல் பணிக்கு விருப்பமுள்ளவா்களின் பட்டியலை தயாரித்து இந்த மாத இறுதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

அவற்றை சரிபாா்த்து பட்டியல் விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவதுடன், தேர்தல் பணிகளில் மாவட்ட நிா்வாகங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment