Thursday, January 7, 2021

பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் மிதிவண்டி

திருத்தணி அரசினர் ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாலசுப்ரமணியம், தெமினா கிரேனாப் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், ஆவின் சேர்மன் சந்திரன் ஆகியோர் பங்கேற்று, 405 மாணவியர், 301 மாணவர்கள் என, 706 பேருக்கு, மிதிவண்டிகள் வழங்கினர்.

அதே போன்று, திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், எம்.எல்.ஏ., நரசிம்மன், 180 மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.

No comments:

Post a Comment