Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 16, 2021

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..

சோற்று கற்றாழையை அடுத்து அதன் நடுப்பகுதியை தனியாக எடுத்து அதை மோரில் கலந்து அரைத்து தினமும் குடித்து வந்தால் அல்சர் குணமாகும். மேலும் என்றும் இளமையான தோற்றம் உண்டாகும்.

செம்பருத்தி பூவை நன்கு நிழலில் போட்டு உலர்த்தி பிறகு அதை பொடியாக்கி வைத்து கொள்ளவும். அதேபோல் சீயக்காயை பொடி செய்து எடுத்து கொள்ளவும். பின்பு இந்த இரண்டு பொடியையும் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி முடி வளர்ச்சி அடையும். அதேப்போல் முடி உதிர்வு நிற்கும். கண்கள் மற்றும் உடலுக்கும் குளிர்ச்சி அளிக்கும்.

குப்பைமேனி சாற்றை குடித்து வந்தால் சளி, இருமல் சரியாகும். ஆனால் இந்த சாற்றை சரியான அளவில் குடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் வயிற்றுப்போக்கு உண்டாகும்.

தினமும் தூங்கும் முன்பு சுடு தண்ணீர் குடித்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும். வாரம் ஒருமுறை அருகம்புல் சாறு குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும். மேலும் உடல் சூடு தணியும்.

இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் இரத்த கொதிப்பு நோய் குணமாகும்

No comments:

Post a Comment