Saturday, January 16, 2021

சர்க்கரையின் அளவைக் குறைக்கும், எலும்புகளை வலிமையாக்கும் - கேழ்வரகு

கேழ்வரகை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் நீரிழிவு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். 

ராகில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைத்து, சீராக பராமரிக்கும். 

வளரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு கூழ் கொடுப்பது மிகவும் நல்லது. இதற்கு அதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி தான் காரணம். இச்சத்துக்களால், எலும்புகள் வலிமையடைவதோடு, அதன் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இளம் தலைமுறையினரும் கேழ்வரகு கூழ் குடித்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

No comments:

Post a Comment