JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்படுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜன., 19ம் தேதி முதல் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பாதுகாப்பான முறையில் இருப்பதற்கு, பள்ளி வளாகம் நாள்தோறும் துாய்மைப்படுத்தப்படுவது, கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வகுப்புகள் பிரிப்பது, பாடவேளை அட்டவணை தயாரித்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இம்முறை நான்கு வகுப்புகள் பள்ளியில் செயல்பட உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தவும், மாற்றமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் பட்சத்தில், கூட்ட அரங்கம் ஆய்வகம், நுாலகங்களை பயன்படுத்துவது, உட்பட கூடுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களும், பள்ளிக்கு பாதுகாப்பான முறையில் வந்து செல்ல, பள்ளி நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment