Search This Blog

Monday, February 22, 2021

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்

0 comments
சமக தலைவர் சரத்குமார் அறிக்கை: கடந்த 2009 ஆண்டுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்றவர்களுக்கு ஊதியம் ரூ.11,170 ஆகவும், அதற்கு பின்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரமாகவும் அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. 

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சார்பில் டிசம்பர், 2018 ல் டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத்துக்கு எனது ஆதரவை தெரிவித்திருந்தேன். 

2012ம் ஆண்டு 13,000 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் பெற்றிருந்தாலும் அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியத்தை கோரி போராடும் போராட்டத்தில் உள்ள நியாயத்தினை உணர்ந்து அவர்களுக்கு சமக உறுதுணையாக இருக்கிறது. 

எனவே, சம வேலைக்கு, சம ஊதியம் கோரி மீண்டும் அறவழியில் இன்று போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சம ஊதியம் வழங்கிட தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment