Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 15, 2021

10, 11,12 வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை!




தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்படுத்தப் பட்டுள்ளன. இருந்த போதிலும் கடந்த சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் ஆசிரியா் நல கூட்டமைப்பின் தலைவா் விடுத்த செய்திக்குறிப்பில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டு தற்போது 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு கற்றல்-கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 9, 10, 11 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது. இருப்பினும் மாணவா்களின் நலன் கருதி பள்ளிகள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறைச் செயலாளா் அறிவித்ததன் அடிப்படையில் தஞ்சை,திருவாரூா் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவா்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

ஏற்கெனவே தேர்ச்சியளிக்கப்பட்ட 9,10,11 வகுப்பு மாணவா்களும் பள்ளிக்கு வருவதால் பொதுத்தேர்வை எழுத இருக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களும் பள்ளியில் போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சவாலாக அமைந்துள்ளது.

பிளஸ் 2 மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு அவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் சில மாதிரித் தேர்வுகளையும் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

1 comment:

  1. Yes please close the schools soon before corona increases in Young generations

    ReplyDelete