திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு: மே 31க்கு மொழிபாட தேர்வு மாற்றம் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, April 13, 2021

திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு: மே 31க்கு மொழிபாட தேர்வு மாற்றம்

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் பரவியது.மொழி பாட தேர்வு மட்டும் மாற்றம்இந்நிலையில், இன்று (ஏப்.12) முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையின் பின்னர் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால் மொழிப்பாட தேர்வு மட்டும் மே 3-ந்தேதிக்குப்பதில் மே 31-ந்தேதி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. 

மே- 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் மே-3 ம் தேதி நடைபெறும் தேர்வு மட்டும் மே-31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.தேர்வுகள் சமூக இடைவெளியுடனும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடனும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad