Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 22, 2021

"புதிய கட்டுப்பாடு" இ-பதிவு தேவையில்லை அரசு அறிவிப்பு..! இந்த காரணத்திற்காக மட்டும் தான்.!

தமிழகத்தில் மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்கவே இ-பதிவு தேவை இல்லை.

தமிழகத்தில் அதிகரித்து வரும் தோற்று பாதிப்பினால் மாநில அரசு கடந்த 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரை மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவித்து தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி இ-பாஸ் கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் அத்தியாவசிய பணிகளுக்காக செல்வோர் கட்டாயம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது இந்நிலையில் இ- பதிவு தமிழக அரசு கூறியுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் மக்கள் மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்ற பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் தங்களது ஆவண இணையதளத்தில் இ-பதிவு செய்ய வேண்டும். மேலும் இ- பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட தளர்வின்றி ஊரடங்கு காலத்தில் உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு அனுமதிக்கப்படும். மேலும் மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இப்பதிவு தேவையில்லை என அறிவித்துள்ளது.

இ-பதிவு இணையத்தளம்: https://eregister.tnega.org

No comments:

Post a Comment