Search This Blog

Sunday, May 9, 2021

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0 comments
கடலுார் மாவட்டத்தில் அமைப்புசாரா நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டம், தொழிலாளர் உதவி ஆணையர் ராமு செய்திக்குறிப்பு:தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து, 60 வயது நிறைவடைந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது, கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வரும் ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment