உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, June 30, 2022

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் இன்றுடன் முடியவிருந்த நிலையில் ஜூலை 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா எண் 14417ல் தொடர்புகொள்ளலாம். ரூ.1000 உதவித் தொகை பெற இதுவரை சுமார் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad