JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அனைவருக்கும் வணக்கம்.
எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றன. களத்தில் இதன் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்று அறியவும் களத்தில் செயல்படும் ஆசிரியர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளவும் நேரடியான தளம் ஒன்று வேண்டும்.
மாநில அளவில் தீட்டப்படும் செயல்திட்டங்களில் வகுப்பறைகளில் இருந்து வரும் களத்தகவல்களை பெற்று குறிக்கோள்களை வடிவமைக்க TN EE Mission என்ற டெலிகிராம் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் அனைத்து மாநில கருத்தாளர்கள் மாவட்ட கருத்தாளர்கள் இணைந்து கொள்ள வேண்டும்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்கும் வகையில் அவர்களையும் படிப்படியாக இந்த குழுவில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களின் சிறந்த வகுப்பறை செயல்பாடுகளை மற்ற ஆசிரியர்களுக்கு பகிர்ந்து கொள்ள ஒரு தளமாக இந்தக் குழு விளங்கும்.
எனவே அனைத்து மாவட்ட நிலை கருத்தாளர்கள் ஆசிரியர்களை இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ள தகவல் தெரிவிக்கவும்.
சிறப்புப் பணி அலுவலர்.
No comments:
Post a Comment