Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 17, 2022

TNPSC GROUP 3தேர்வு அறிவிப்பு: 232 பணியிடங்கள் நியமனம்

'குரூப் 3' உள்ளிட்ட 232 காலியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.

அரசு புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211; பொது சுகாதார துறையில் கணக்கீட்டாளர் 5 மற்றும் புள்ளியியல் ஒருங்கிணைப்பாளர் 1 என 217 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான எழுத்து தேர்வு 2023 ஜன. 29ல் நடக்கிறது. பட்டப்படிப்பு அளவில் புள்ளியியல் மற்றும் கணிதம் சார்ந்த ஒரு தாள் மற்றும் தமிழ் தகுதி மற்றும் பொது படிப்பு இணைந்த ஒரு தாள் என இரு தாள்களுக்கு தேர்வு நடக்கிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 60 வயது நிரம்பியிருக்க கூடாது. மற்றவர்களுக்கு 32 வயது உச்ச வரம்பு. இந்த பணியில் சேர புள்ளியியல் கணிதம் மற்றும் உயிரி புள்ளியியல் உள்ளிட்ட பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


குரூப் 3 பதவி

கூட்டுறவு துறையில் 'குரூப் 3' பதவியில் இளநிலை ஆய்வாளர் 14; தொழில் மற்றும் வணிக துறையில் கிடங்கு காப்பாளர் பதவியில் ஒரு காலியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான எழுத்து தேர்வு ஜன. 28ல் நடக்கிறது. இளநிலை ஆய்வாளர் பதவிக்கு 10ம் வகுப்பும்; கிடங்கு காப்பாளர் பதவிக்கு பிளஸ் 2வும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வணிகவியல் பட்டம் அல்லது கூட்டுறவு மேலாண்மை படிப்பில் டிப்ளமா முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

குறைந்தபட்ச கல்வி தகுதியை விட அதிகமாக படித்தவர்களுக்கு மட்டும் 59 வயது வரை தேர்வு எழுத அனுமதி உண்டு. ஆதிதிராவிடர் அருந்ததியர் பழங்குடியினருக்கு 37; மிக பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்களுக்கு 34 மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு 32 வயது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்த இரண்டு தேர்வுகளுக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. அக். 14 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. கூடுதல் விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment