Subscribe Us

Saturday, October 22, 2022

நாட்டுக் கம்பு தேங்காய் பர்ஃபி

தேவையானவை:

கம்பு மாவு - 1 கப்,
தேங்காய் துருவல் - 1 கப்,
கருப்பட்டி - 1½ கப்,
நெய் - ¼ கப்,
ஏலத்தூள்,
கசகசா,
குங்குமப் பூ - தலா சிறிதளவு.

செய்முறை:

கருப்பட்டியை நீரில் கரைத்து வடிகட்டி, ஏலத்தூள், கம்புமாவு, கசகசா, குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, சிறு தீயில் கிளற வேண்டும். மாவு நன்கு சுருண்டு கெட்டியாகும் சமயத்தில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறி கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் சிறிது தேங்காய் துருவலை பரப்பி அதன் மேல் கிளறிய கலவையை கொட்டி, சமமாக தட்டி மேலேயும் தேங்காய் துருவலை பரப்பவும். ஆறியதும் துண்டுகள் போடவும். (கருப்பட்டிக்கு பதில் வெல்லமும் சேர்க்கலாம். இரும்புச் சத்து நிறைந்த ஸ்வீட் இது.)

No comments:

Post a Comment

Popular Feed