Search This Blog

Friday, October 21, 2022

TET தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

0 comments
2011ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
 
இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 12 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி புனிதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 
 
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக ஆறு மாதங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment