குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த,திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகரிப்பை (Group - 4 notification ADDENDUM) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள்சேர்க்கை அறிவிப்பில் 7,301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், நியமனம் செய்யப்பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,801 ஆக உயர்த்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக கடந்த ஜனவரி மாதம் செய்திகள் கசிந்தன.
இந்நிலையில், குரூப் 4 காலியிடங்களை 10,117ஆக டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட காளியிடங்கள் விவரம்:
| பதவி | முந்தைய காலியிடங்கள் | திருத்தியமைக்கப்பட்ட காலியிடங்கள் |
| கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) | 274 | 425 |
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) Junior Assistant (Non - Security) | 3590 + 3 C/F | 4952 |
இளநிலை உதவியாளர் (பிணையம் ) Junior Assistant ( Security) | 88 | 88 |
| வரித் தண்டலர் | 50 | 50 |
| தட்டச்சர் (Typist) | 2069*+ 39 C/F | 3311 |
| சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) | 885*+139 C/F | 1176 |
| பண்டக காப்பாளர் (Store keeper) | 1 | 1 |
இதுதவிர, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் போன்ற பல்வேறு துறைகளில் கீழ் அறிவிக்கப்பட்ட 163 காலியிடங்கள் எண்ணிக்கை 252 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.